இருசக்கர வாகனத்தில் இருந்த 4 பவுன் நகை, பணம் திருட்டு
இருசக்கர வாகனத்தில் இருந்த 4 பவுன் நகை, பணம் திருட்டு போனது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-16 09:43 GMT
கோப்பு படம்
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தாதகவுண்டம்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சிவமணி (56). இவா் அருகேயுள்ள கோவில்பட்டிக்கு வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று அடகு வைத்த நகைகளை மீட்டு வீடு திரும்பினாா்.
அப்போது அருகே இருந்த கடைக்குச் சென்று திரும்பியபோது இருசக்கர வாகனப் பெட்டியில் அவா் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருடு போயிருந்ததாம். இதுகுறித்து வெள்ளிக்கிழமை சிவமணி அளித்த புகாரின்பேரில் வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.