தனியார் நிறுவன ஊழியரின் மடிக்கணினி திருட்டு
தனியார் நிறுவன ஊழியரின் மடிக்கணினியை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மடிக்கணினியை திருடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-30 12:19 GMT
தனியார் நிறுவன ஊழியரின் மடிக்கணினி திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 23). இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் சம்பவத்தன்று கோவை செல்வதற்காக புதிய பஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு தனது மடிக்கணினியை வைத்திருந்தார். சிறிது நேரத்தில் மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மடிக்கணினியை திருடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். திருட்டு போன மடிக்கணினியின் மதிப்பு ரூ.80 ஆயிரம் என கூறப்படுகிறது.