பட்டப்பகலில் கூட்டுறவு சர்க்கரை ஆலை பொருட்கள் திருட்டு
மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு நடிப்பிசை புலவர் கே. ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 1987 ஆம் ஆண்டு முதலமைச்சர் எம்ஜிஆர் துவக்கி வைக்கப்பட்டது. இந்தியாவிலேயே அதிக லாபத்துடன் இயங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற பரிசை வென்றது. கரும்பு விவசாயிகளுக்கு போனஸ் கொடுத்ததுடன் பல ஆலைகளுக்கு கடனும் வழங்கிய ஆலையாகும். இந்த ஆலையை விரிவாக்கம் செய்த போது அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆலையை சரிவர இயக்க இயலவில்லை. பழுதான ஆலய வைத்தே இயக்கியதால் தொடர் நட்டம் ஏற்பட்டு வந்தது.
ஆலையை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்காததால் 2017ல் ஆலை மூடப்பட்டது ஆலைப் பணியாளர்கள் பல்வேறு சர்க்கரை ஆலைகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர். என் பி கே ஆர் ஆர் ஆலை பாதுகாப்பும் குறைக்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக ஆலையின் சுற்றுச் சுவர் இடிந்த நிலையில் கிடந்ததால், பல லட்சம் ரூ. மதிப்பிலான இரும்பு பொருட்களை பகல் இரவு என பாராமல் திருடப்பட்டு வருகிறது.
இந்த ஆலையை மீண்டும் இயக்க விவசாயிகள் போராடிவரும் நிலையில். தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதே நேரத்தில் ஆலையில் உள்ள பொருட்கள் தொடர் திருடப்பட்டு வருவதையும் தடுக்கவில்லை. அவ்வப்பொழுது திருட்டு குறித்து மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு என் பி கே ஆர் ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை ஆலைப் பொருட்களை பாதுகாக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.