போலீசார் என கூறி மூதாட்டியிடம் நகை திருட்டு

சிவகங்கையில் போலீசார் என கூறி மூதாட்டியிடம் நகை திருடிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-04-26 01:22 GMT

போலீசார் என கூறி மூதாட்டியிடம் நகை மோசடி

சிவகங்கை மேலரதவீதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் மனைவி மீனாட்சி(68). இவர் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார். அவர் கழுத்தில் நான்கரை பவுன் தங்க செயின் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இரு சக்கரவாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மீனாட்சியிடம் தாங்கள் போலீஸார் எனவும், இப்பகுதியில் திருடர்கள் நடமாட்டம் இருக்கிறது, ஆகவே நீங்கள் அணிந்திருக்கும் சங்கிலியைப் பறித்துச்சென்று விடுவார்கள். சங்கிலியை பாதுகாப்பாக கழற்றி கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.

இதை நம்பிய மீனாட்சி தனது சங்கிலியை கழற்றி கைப்பையில் வைக்க முற்பட்டார். அப்போது அவருக்கு உதவுவது போல நடித்து சங்கிலியை எடுத்துக்கொண்டு, பையில் கல்லை வைத்துள்ளனர். பெருமாள் கோயிலில் சென்று அங்கு கைப்பையை திறந்து பார்த்த போது உள்ளே நகைக்கு பதிலாக கல் இருந்துள்ளது. உடனடியாக அங்கு இருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அவர்கள் வெளியில் வந்து பார்த்த போது அந்த மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து மீனாட்சி, சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர் அந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் லிங்க பாண்டி வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News