மூன்று வீடுகளில் பணம் திருட்டு
பெரம்பலூரில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் பணம் திருடப்பட்டுள்ளது.
Update: 2024-05-14 13:39 GMT
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அருகே உள்ள தைக்கால் கிராமத்தை சேர்ந்தவர் சையத் ஜாபர் (வயது 55). இவர் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் வெள்ளி கொலுசு உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த அப்துல்லாஜிஸ் (62) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1,000 மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். அதே போல் அந்த பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா (34) என்பவரது வீட்டின் பூட்டையும் உடைத்து மர்மநபர்கள் திருட முயன்றுள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் நேற்று வி.களத்தூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.