லால்குடியில் ரூ.1 30 லட்சம் திருட்டு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள இ. சேவை மையம் எதிரில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கில் ரூ.1.30 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.;
கோப்பு படம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் வெங்கடாசலபுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் 46 வயதான சோலைராஜன். இவர் புள்ளம்பாடியில் உள்ள கனரா வங்கியில் தனது நகையை அடமானம் வைத்து ரூ.1 30 லட்சம் பெற்றுள்ளார். அந்த பணத்தை தனது ஸ்கூட்டி பெப் மோட்டார் பைக்கில் வைத்துவிட்டு எதிரே உள்ள இ.சேவை மையத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக்கில் இருந்த பணம் மாயமாகி இருந்தது.அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சோலை ராஜன் இச்சம்பம் குறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.