உத்தமபாளையம் - சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
ரோந்து பணியில் மதுவிற்றவரை கையும் களவுமாக பிடித்த போலீசார்;
Update: 2024-02-26 19:21 GMT
சட்டவிரோத மது விற்றவர் கைது
தேவாரம் காவல் நிலைய சார்பாக தெய்வக் கண்ணன் தலைமையிலான காவல்துறையினர் கீரை கடை மூக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து மூடி வினோபாஜி காலனி சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.