தேனியில் சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வு
தேனி மாவட்டத்தில் ஜூன் 19ஆம் தேதி சிறப்பு மக்கள் நீதிமன்றம் அமர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 12:11 GMT
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் ஜூன் 19ஆம் தேதி சிறப்பு மக்கள் நீதிமன்றத்தின் சமரசத்துக்கு முந்தைய பேச்சுவார்த்தைக்கான அமர்வு நடைபெறுகிறது. இந்த அமர்வில் நேரிலோ காணொளி காட்சி மூலமோ வழக்காடிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு வழக்குகள் மீது தீர்வு காணலாம்.04546 - 291566-ல் தொடர்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்துள்ளது