ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.;
Update: 2024-03-13 05:15 GMT
ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மதியம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அடிப்படை வசதிகள் குறித்து அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அரசு மருத்துவர்கள் மற்றும் பணி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.