பசு மாடுகளை திருடி சந்தைக்கு விற்பனை செய்ய முயன்றநபர்களை காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

வாணியம்பாடி அருகே பசு மாடுகளை திருடி சந்தைக்கு விற்பனை செய்ய முயன்ற நபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.

Update: 2024-03-04 05:45 GMT

பசு மாடு திருட்டு


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பசு மாடுகளை திருடி சந்தைக்கு விற்பனை செய்ய முயன்ற நபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அலசந்தபுரம் நாராயணபுரம் காட்டுக்கொள்ளி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பசுமாடுகள் திருடு சம்பவம் நடைபெறுகின்றன . திம்மாம்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார் அளித்து இருந்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர் இந்நிலையில் பொதுமக்களே தமிழக ஆந்திரா எல்லையோரம் உள்ள காட்டுக் கொள்ளி மலைப்பகுதியில் இருந்து இரண்டு பசு மாடுகளை மலை வழியில் இறக்கி நாராயணபுரத்திலிருந்து ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த சாந்திபுரம் பகுதியில் உள்ள மாட்டுச்சந்தைக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இவர்களை பின்தொடர்ந்து இரண்டு பசு மாடுகளை திருடிச் சென்ற திருடர்களை பொதுமக்களே பிடித்து வாணியம்பாடி திம்மம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News