கஞ்சா விற்ற வாலிபர் கைது!

சந்தைப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்தனர்.;

Update: 2024-03-23 05:42 GMT

வாலிபர் கைது

மணமேல்குடி கடற்கரை பகுதி யில் கடந்த வாரம் ரூ.111 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின் றனர். அதன்படி சப் இன்ஸ்பெக்டர் நாபிக் இப்ரா ஹிம் மற்றும் போலீசார் நேற்று சந்தைப்பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News