போலியான தோற்றத்தை ஏற்படுத்த பாஜக முயல்கிறது: தபெதிக மனு

போலியான தோற்றத்தை ஏற்படுத்த பாஜக முயல்கிறது என தபெதிக மனு அளித்துள்ளனர்.

Update: 2023-10-28 10:06 GMT

போலீஸ் கமிஷனர் அலுவலகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.அந்த மனுவில் கவர்னர் மாளிகை முன்பு கடந்த 25ம் தேதி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசப்பட்டது.அந்த பெட்ரோல் குண்டு போலீசார் வைத்திருந்த தடுப்பு கம்பியில் பட்டு கீழே விழுந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா ரவி என்ற ரவுடியை கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு பெட்ரோல் குண்டு பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.ஆனால் கவர்னர் மாளிகை அதிகாரிகள் கவர்னர் மாளிகை வளாகத்துக்குள் நான்கு பேர் நுழைந்து பெட்ரோல் குண்டு வீசியதாக பொய்யான புகாரை காவல் நிலையத்தில் அளித்துள்ளதாகவும் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது போல் தோற்றத்தை ஏற்படுத்த தவறான தகவலை பரப்பி வருவதாக மனுவில் குறிப்பிடபட்டு இருந்தது.இதற்கு பாஜக-வும் கவர்னரும் துணை போவதாகவும் சென்னையில் பாஜக கொடிக்கம்பம் வைக்க அனுமதி அளிக்காத நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்பது போல பாஜக ஐந்து பேர் கொண்ட விசாரணை குழுவை தமிழகத்திற்கு அனுப்பி உள்ளனர். இந்த வேகத்தை பாஜக அரசு மணிப்பூரில் கடந்த ஆறு மாதமாக நடந்து வரும் கலவரத்தில் ஏன் காட்டவில்லை எனவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று சமீப கால ஆய்வறிக்கைகள் கூறுகின்றன ஆனால் பாஜகவும் கவர்னரும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.எனவே போலீசார் பொய்யான புகார் அளித்த கவர்னர் மாளிகை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News