தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
மோர்பாளையத்தில் உள்ள பழமைவாய்ந்த பைரவநாதமூர்த்தி கோவிலில் நேற்று நடந்த தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
Update: 2024-01-04 15:20 GMT
மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையத்தில் உள்ள சுமார் 400ஆண்டுகள் பழமைவாய்ந்த பைரவநாதமூர்த்தி கோவிலில் நேற்று, மார்கழிமாத தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு பகல் 12.30மணியளவில், மூலவருக்கு சிறப்பு அபிசேக ஆராதனை நடந்தது. கோவிலை சுற்றி உற்சவ மூர்த்தி வலம் வந்தார். பக்தர்கள் நீர்பூசணி, தேங்காய் உள்ளிட்டவற்றில் நெய்ஊற்றி வழிபட்டனர். திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஜாதகங்கள் சுவாமியின் பாதத்தில் வைத்து விரையில் திருமணமாக வேண்டிக்கொண்டனர். சேலம், கரூர், ஈரோடு, மதுரை, காரைக்கால் என பல்வேறு மாவட்டங்களிலிருந்துவந்த பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 1000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.