திம்பம்: சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - 15 பேர் படுகாயம்
திம்பம் மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சத்தி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழக - கர்நாடக மாநிலங்களை இனைக்கும் முக்கிய வழித்தடம் என்பதால் இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்ககள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று கரூரில் உள்ள கூட்டுறவுத் துறையில் வேலை பார்ப்பவர்கள் 18 பேர் குடும்பத்துடன் ஆசனூர் மலைப்பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
சுற்றுலா முடிந்து மதியம் கரூருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது திம்பம் மலைப்பாதை 11 -வது கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பும் பொழுது எதிர்பாராத விதமாக ரோட்டோரமாக கவிழ்ந்து விபத்துக் குள்ளனது. அந்த வழியாக வந்த வாகனஓட்டிகள் விபத்து குறித்து ஹாசனுர் போலீஸருக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு சென்ற போலீசார் காயமடைந்த ஆசைத்தம்பி ( 31), தீபா ( 43), டிரைவர் ஈஸ்வரமூர்த்தி (27 ) கோபி (47), ரேவதி - 42 வைஷ்ணவ் (11), பிரகாஷ் (39), திவ்யா (32), பத்மினி (58), தாரிணி ( 23), நல்லதம்பி (40), தர்ஷன் (16), ஏகநாதன் ( 33), பரமேஸ்வரி (33) வாகினி (03) ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக சத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஆசனூர் போலீசார் நடத்தி வருகின்றனர்.