திருச்செங்கோடு : மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 614 மாணவிகள் பட்டம்பெற்றனர்.;
By : King Editorial 24x7
Update: 2023-11-04 12:12 GMT
மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள நிலையம் எலையாம்பாளையம் கிராமத்தில் 20 ஆயிரம் மகளிர் பயிலும் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது,விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி விவேகானந்தா தொழில்நுட்ப மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து 614 பெண்களுக்கு இன்று பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் கருணாநிதி தலைமை தாங்கினார், மலேசியா தான்சேனியா பல்கலைக்கழக துணைவேந்தர் அசிம் பட்டங்களை வழங்கினார். இரண்டு பெண்கள் முனைவர் பட்டம் பெற்றனர். 400க்கும் மேற்பட்ட பெண்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த பட்டமளிப்பு விழாவில் பெற்றோர்கள், மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.