திருச்செங்கோடு : ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு செல்வ லட்சுமி அலங்காரம்..!
திருச்செங்கோட்டில் நவராத்திரியை முன்னிட்டு சொக்கநாச்சி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.;
By : King Editorial 24x7
Update: 2023-10-21 06:14 GMT
சொக்கநாச்சி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அருள்மிகு சொக்கநாச்சி அம்மன் என்று அழைக்கப்படும் பத்திரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு குமார் 5 லட்சம் மதிப்பில் 500,200,100 ரூபாய் நோட்டுகளால் செல்வலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது, இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ரமணி காந்தன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.