வேம்பு அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம்
கள்ளகுறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் அரசு மற்றும் வேம்பு அம்மனுக்கு நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.;
Update: 2024-05-11 04:31 GMT
திருகல்யாணம்
கள்ளகுறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் உள்ள புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே சக்தி விநாயகர் கோவிலில் நடந்த வைபவம், கணபதி பூஜை, திருவிளக்கு பூஜையுடன் துவங்கியது. பின், யாகசாலை அமைத்து சிவ தொண்டர்கள் முற்றோதல் செய்தனர். தொடர்ந்து அரசு மற்றும் வேம்பு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.