சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
தர்மபுரி அருள்மிகு ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட கோல்டன் தெரு பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத உடனாகிய ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இன்று சித்திரை மாதம் எட்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை 10:30 மணிக்கு மேல் 12 மணிக்குள் மீனம் லக்கினத்தில் ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி Ex.MLA மற்றும் தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மற்றும் பொம்மன் இந்திராணி ஆகியோர் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு. பின்னர் சுவாமி திருவீதி உலா வந்தார் இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த இ ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழா குழுவின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.