திருக்கார்த்திகை தீப திருவிழா: மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

Update: 2023-10-31 16:38 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீப திருவிழா -2023 முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ். இன்று கள ஆய்வு மேற்கொண்டு தெரிவித்தாவது, அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருவூடல் தெரு சந்திப்பிலிருந்து காந்தி சிலை வரை 1000 மீ. அளவில் நவீன இயந்திரங்களை கொண்டு நெடுஞ்சாலை துறையின் மூலம் புதியதாக சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி. நிறைவுபெற்ற பணிகள் மற்றும் பேவர்பிளாக், மின் பகிர்மான கழகம் சார்பில் மின் வடம் பதித்தல் பணிகள், நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை, கழிவுநீர் நீர் கால்வாய் பணிகள் உள்ளிட்ட அனைத்தும் அனைத்தும் பணிகளும் முழுஅளவில் முடியும் தருவாயில் உள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இறுதி கட்ட பணியினை போர்கால அடிப்பயிைல் மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். வருகின்ற 10.11.2023 ம் தேதிக்குள் அனைத்து பணிகளை விரைந்து முடிக்கவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் கோயில் மற்றும் கிரிவலப் பாதை முழுவதும் சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை மூலம் அகற்றிடவும், அகற்றப்படதா கடைகளுக்கு அபாதாரதம் விதிக்கவும், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வர்களை கொண்டு கிரிவலப்பாதை சாலைகளை அனைத்தும் தூய்மைப்படுத்தவேண்டும்.

கூடுதல் குப்பை தொட்டிகளை வைக்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி, நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப்பொறியாளர் ரகுராமன், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் திருவண்ணாமலை வட்டம் மேற்பார்வை பொறியாளர் பழனிராஜு, செயற்பொறியாளர் (பொது) ஜெகனாதன், நகராட்சி பொறியாளர் நீலேஸ்வரன், திருவண்ணாமலை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, வட்டாட்சியர் சரளா, வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News