திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்மன் கோயில் ஆனித்திருவிழா
திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்மன் கோயில் ஆனித்திருவிழா நடைபெற்றது
திருமயம் அருகே உள்ள திருக்கோளக் குடியில் வரலாற்றுச்சிறப்பு மிக்க திருக்கோளநாதர்_ ஆத்மநாயகிஅம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஆனித்திருவிழா கடந்த 12 ம்தேதி காப்புக்கட்டும் வைபவத்துடன் தொடங்கியது.
தினசரி சுவாமி,அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ,ஆராதனைகள் ,வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. 4 தேர்கள் அலங் கரித்து வைக்கப்பட்டிருந்தன. அதில் தேரில் பிள்ளையார்,சண்டிகேஸ்வர ர்,இரண்டாவது தேரில் சுப்பிரமணியர்,வள்ளி தெய்வானை,3 வது தேரில் திருக் கோளநாதர்,4 வது தேரில் ஆத்மநாயகி அம்மன் ஆகியோர் காலை 10.30 மணிக்கு எழுந்தருளினர்.
பின்னர் தேர் காலிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் , சுவாமி தேரை வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பிராணர் சங்க தலைவர் நமச்சிவாயம், திருக்கோளக்குடி ஊராட்சித்தலைவர் பாலசுப்பிரமணியம், ஆத்திரம்பட்டி ஊராட்சி தலைவர் நல்லகுமார், கனகசபாவதி,,அம்பி சிவாச்சாரியார், சந்தர்கணேச சுவாமிகள்,கிராம அம்பலம் நல்ல முத்து, தேவார திருமுறை ஓதுவார் நல்லதம்பி உட்பட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
எஸ்.ஐ. கலையரசு தலைமையில் போலீஸ்பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. படவிளக்கம்.. திருமயம் அருகே திருக்கோளக்குடியில் திருக்கோளநாதர்_ ஆத்மநாயகி கோயிலில் ஆனித்திருவிழா தேரோட்டம நேற்று கோலாகலமாக நடந்தது.