பஸ் நிறுத்தத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருமயம் அருகே இளஞ்சாவூர் பஸ் நிறுத்தத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்
திருமயம், அரிமளம், கே.புதுப்பட்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்பி சுஜாதா உத்தரவுப்படி டிஎஸ்பி சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்.இன்ஸ் பெக்டர் கார்த்திக் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருமயம், அரிமளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில், அவர் கல்லுார் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வீரப்பன்(52) என்பதும், கிராமப்புறங் களில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, பட்டை தீட்டி வெளிசந்தை யில் கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் அளித்த தகவலின்பேரில் இளஞ்சாவூர் பஸ் நிறுத்தத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். வீரப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன.