திருவையாறு: திருட்டு சம்பவங்களை தடுக்க 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா

திருவையாறு காவல் நிலையத்தில் நடந்த வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் திருட்டு சம்பவங்களை தடுக்க 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.;

Update: 2024-04-30 05:04 GMT
கண்காணிப்பு கேமரா

திருவையாறு நகரில் வாகனங்கள் திருட்டு போவதை தடுக்கவும், கடைகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் காவல்நிலையத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஏடிஎஸ்பி மதன் தலைமை வகித்தார்.

காவல் ஆய்வாளர் சர்மிளா, அனைத்து வியாபாரிகள் சங்க உயர்மட்ட குழு தலைவர் திலகர், அனைத்து வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் தொன் போஸ்கோ, அசோக்குமார், சாமிநாதன், பஞ்சாபிகேசன், முகமது ஜுனைத் ஹசன் சாகிப், நல்லேந்திரன், வெங்கட கிருஷ்ணன், வினோத்குமார் சோப்ரா, வெங்கடேசன், சின்னத்தம்பி, சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவையாறு கடைவீதிகளில் பாதுகாப்புக்கு 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

Advertisement

அதற்கான கேமராக்களை வணிக நிறுவனங்கள் கொடுத்து உதவ வேண்டும் என்று ஏடிஎஸ்பி மதன் கேட்டுக் கொண்டார். 30 கேமராவிற்கான செலவு தொகை ஒரு லட்சம் ரூபாய் தருவதாக அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவித்தனர். கேமராக்கள் 10 நாட்களுக்குள் வழங்கினால் உடன் நகரில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகளும் தங்கள் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும் கூட்டத்தில் காவல்துறையினர் ஆலோசனை வழங்கி பேசினர்.

Tags:    

Similar News