திருவள்ளுவர் தினத்தை சிறப்பாக கொண்டாடிய அரசு பள்ளி மாணவர்கள்
விழுப்புரம் மாவட்டம், கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் கூட்டேரிப்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் விடுதலை போராட்ட வீரர்கள் வேடமணிந்து திருவள்ளுவர் தினத்தை கொண்டாடினர்.
திருவள்ளுவர் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் கூட்டேரிப்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து வ.உ சிதம்பரனார், கொடிகாத்த குமரன், பாரதமாதா மற்றும் திருவள்ளுவர் வேடம் பூண்டு திருவள்ளுவர் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனை மாவட்ட கவுன்சிலர் விஜயன் அவர்கள் துவக்கி வைத்தார். இவருடன் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கண்ணன், கன்னிகாபுரம் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
விழாவின் சிறப்பம்சமாக பள்ளி மாணவர்கள் நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாடி ஊர்வலமாக திருவள்ளுவருக்கு கோவில் அமைந்துள்ள இடத்திற்கு சென்று முற்றோதல் செய்து முடித்து வைத்தனர். சிறப்பாக பங்காற்றிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.