செய்யாறு : திருவத்திபுரம் நகராட்சியில் 75வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்
தூய்மை பணியாளர்களுக்கு எம்.எல்.ஏ ஓ.ஜோதி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.;
By : King Editorial 24x7
Update: 2024-01-26 07:58 GMT
திருவத்திபுரத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை தாங்கினார். நகரமன்ற துணை தலைவர் பேபி ராணி பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு எம்.எல்.ஏ ஓ.ஜோதி தேசிய கொடியை ஏற்றி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் ஓன்றிய செயலாளர் ஞானவேல் வார்டு கவுன்சிலர்கள் செந்தில், கார்த்திகேயன், கோவேந்தன், மகாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.