திருவாரூரில் தொடர் மின்வெட்டு
திருவாரூர் அருகே உள்ள கிராம பகுதிகளில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-08 04:33 GMT
மின்வெட்டு
தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகி பகல் நேரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் 101 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது.
இதனால் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. பல்வேறு கிராம பகுதிகளில் தொடர் மின்வெட்டு காரணமாக கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள் ,முதியவர்கள், படிக்கும் மாணவ மாணவியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.