திருவேற்காட்டில் தனியார் பள்ளி பூட்டை உடைத்து செல்போன் கொள்ளை
திருவேற்காட்டில் தனியார் பள்ளி பூட்டை உடைத்து செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவேற்காடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ்/64.இவர் அதே பகுதியில் ஜனேத் நர்சரி அன் பிரைமரி என்ற தனியார் பள்ளியை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளி அன்று பள்ளி மூடப்பட்டு பின்பு வழக்கம் போல் காலை பள்ளித் திறக்கப்பட்டது. அப்போது பள்ளியில் பணியாற்றும் கிளார்க் பள்ளியில் அலுவலக கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து திருவேற்காடு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரனை நடத்தி வருகின்றனர். பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது அதில் இரண்டு மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் முகமூடி கொள்ளையர்கள் பள்ளியில் கொள்ளையில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் முகம், தலையை மூடிக்கொண்டு பள்ளியின் பின்புறமாக நுழையும் மர்ம நபர்கள் பள்ளியில் அனைத்து இடங்களையும் ஆய்வு செய்து பின்னர் அலுவலக கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.