விராலிமலையில் திருவிளக்கு பூஜை!
விராலிமலையில் உள்ள மெய் கண்ணுடையாள் அம்மன் கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
Update: 2024-01-16 08:21 GMT
விராலிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மெய் கண்ணுடையாள் அம்மன் கோயில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி விளக்கு பூஜை தொடங்கியது. மெய் கண்ணுடையாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. விளக்கு பூஜையின் கடைசி நாளான நேற்று அதிகாலை மெய் கண்ணுடையாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு நடத்தினர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பெண்களுக்கு பிரசாதப் பை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை குத்து விளக்கு பூஜை அமைப்பாளர் சுந்தரம் தலைமையில் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.