திமுக மாநகர பிரதிநிதிகள் கூட்டம் - அமைச்சர் அறிவிப்பு

தூத்துக்குடியில் தி.மு.க. மாநகர பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-03-08 16:02 GMT

அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடியில் தி.மு.க. மாநகர பிரதிநிதிகள் கூட்டம் வரும் 9ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளதாக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடியில் தி.மு.க. மாநகர பிரதிநிதிகள் கூட்டம் வருகிற 9ஆம் தேதி (சனிக்கிழமை) கலைஞர் அரங்கத்தில் மாநகர அவைத் தலைவர் கோ.ஏசுதாஸ் தலைமையில், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது. 

Advertisement

இக்கூட்டத்தில் நான் (கீதாஜீவன்) கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன். 2024 பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை குறித்தும், வாக்காளர் பட்டியல் (OMR படிவம்) பூர்த்தி செய்வது குறித்தும், "இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்" வீடு வீடாக திண்ணைப் பிரச்சாரப் பயண முன்னேற்றம்  குறித்தும், கழக வளர்ச்சிப் பணி குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 

கூட்டத்தில் மாநகரத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், பூத் ஒருங்கிணைப்பாளர்கள். மாவட்ட, மாநகர அணி அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்" என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News