தூத்துக்குடி: ஒவ்வொரு சுற்று முடிவிலும் உடனுக்குடன் வாக்கு விவரங்கள்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை வஉசி பொறியியல் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. காலை 9 மணி முதலே முன்னணி நிலவரங்கள் ஒவ்வொரு சுற்று முடிந்தவுடன் வெளியிடப்படும்.

Update: 2024-06-04 07:56 GMT

ஆட்சியர் ஆய்வு 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணியும், அதன் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்டிஆர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் 14,58,430 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4,72,056 ஆண் வாக்காளர்களும், 5,03,325 பெண் வாக்காளர்களும், 87 திருநங்கைகளும் வாக்களித்து உள்ளனர். இன்று காலை வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது.

முன்னதாக வேட்பாளரின் வாக்கு முகவர்கள் தொகுதி வாரியாக கடும் சோதனைக்கு பின்னர் வாக்கு என்னும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியமான லட்சுமிபதி மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News