புதிய நியோ டைடல் பூங்காவை நாசேரத்தில் அமைக்க வேண்டும் என மதிமுக கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டங்களில் புதிய நியோ டைடல் பூங்காக்கள் அமைக்க அரசு திட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைய உள்ள புதிய நியோ டைடல் பூங்காவை நாசேரத்தில் அமைக்க வேண்டும் என்று மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக அவைத்தலைவர் நாசரேத் வே.இரஞ்சன் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் "தமிழ்நாடு அரசு தஞ்சாவூர், சேலம்,வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் புதிய நியோ டைடல் பூங்காக்கள் அமைக்க திட்டமிட்டு உள்ளது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்.
இதன் மூலம் 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைய இருக்கிற டைடல் பூங்காத் திட்டத்தை எந்த தொழில் நிறுவனங்களும் அற்ற தென் பகுதியில் அமைத்தால், இப்பகுதி மக்களுக்கு நலம் பயக்கும். மேலும் இப்பூங்கா அமைக்க ஏரல் வட்டம், நாசரேத்தில் இயங்கிய திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பு ஆலை மூடப்பட்டதால், கிட்ட தட்ட 25 ஏக்கர் நிலம் பயன்பாடு அற்றுக்கிடக்கிறது.
மேலும், நாசரேத் மற்றும் அதன் சுற்றுப்புறம் படித்த மென்பொறியாளர்கள் மிகுந்த பகுதி. மேலும், தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியப்பகுதி. ஆகவே, திராவிட வண்ண அரசு இத்திட்டத்தை நாசரேத்தில் நிறைவேற்றி தந்து, இப்பகுதி தொழில் வளர்ச்சிக்கு துணை புரிய,தாங்கள் ஆவனச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டார்.
இந்த மனுவின் நகல் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக் கும்,தமிழக மீன்வளம் மீன வர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் மின்னஞ்சல் வழியாக அனு ப்பப்பட்டுள்ளது. இவர்கள் நாசரேத் மீது அதிக அக்க றைக் கொண்டவர்கள் என் பதின் அடிப்படையில், இத் திட்டம் நாசரேத்தில் அமைய துணை நிற்பார்கள் என நாசரேத் வட்டார மக்கள் நம்புகின்றனர்.