தூத்துக்குடி காவலர் ஆற்றில் மூழ்கி பலி

Update: 2023-11-26 07:22 GMT

நீரில் மூழ்கி பலி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பசுவந்தனை பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ். போலீஸ்காரரான இவர் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சோலாடி போலீஸ் சோதனைச்சாவடியில் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை கோவை பட்டாலியன் படையில் இருந்தார். நேற்று காலை கோவிந்தராஜ் சுங்கச்சாவடி அருகே உள்ள சோலாடி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அங்கு துணி துவைத்து கொண்டிருந்தபோது தவறி ஆற்றுக்குள் விழுந்துள்ளார். இதை பார்த்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீசாரிடம் கூறியுள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கோவிந்தராஜ் நீரில் மூழ்கியது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கோவிந்தராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சேலம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றின் மூழ்கி போலீஸ்காரர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News