தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தபால் ஓட்டிற்கு விண்ணப்பிக்கலாம்

அத்தியாவசியப் பணிகள் துறைகளில் பணிபுரியும் வாக்குரிமை பெற்ற பணியாளர்களில் தபால் வாக்களிக்க விரும்புவோர் 25.03.2024-ற்குள் படிவம் 12D இல் வாக்குக்கோரி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Update: 2024-03-21 03:39 GMT
ஆட்சியர் ஜெயசீலன் 

தேர்தல் நடத்துதல் விதிகள் 1961 இன் விதி 27-A இல் வரையறுக்கப்பட்டுள்ளவாறு அத்தியாவசியப் பணிகள் என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இன் பிரிவு 60 இன் படி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் வகையின் கீழ் வரும் பணியாளர்கள் அனைவரும் என்ற பிரிவின் கீழ் அஞ்சல் வாக்குச் செலுத்தும் வசதியினைப் பெறத் தகுதியுடையோர் ஆவார்.

அதன்படி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் அத்தியாவசியப் பணிகள் துறையின் பணியாளர்களில் அஞ்சல் வாக்கு மூலம் வாக்கு அளித்திட விரும்பும் அனைவரும் 34-விருதுநகர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு படிவம் 12D இல் விண்ணப்பம் செய்திட வேண்டும். விண்ணப்பதாரர் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அடங்கிய சட்டமன்ற பேரவைப் பகுதிகளில் ஏதாவது ஒரு பகுதியில் வாக்காளராகப் பதிவு பெற்றிருத்தல் வேண்டும்.

தேர்தல் நாளான 19.04.2024 அன்று விண்ணப்பதாரர் அலுவலகப் பணியில் இருப்பார் என்பதற்கும், அதனால் உரிய வாக்குச்சாவடியில் வாக்களிக்க இயலாத நிலையில் உள்ளவர் என்பதற்கும், துறையின் பொறுப்பு அலுவலர் படிவம் 12 D இன்; பாகம் II இல் சான்று அளித்திட வேண்டும் படிவம் 12D ஆனது 34-விருதுநகர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு 25.03.2024 ற்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

எனவே, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்றப் பேரவை பகுதிகளின் அத்தியாவசியப் பணிகள் துறைகளில் பணிபுரியும் வாக்குப்பதிவு பெற்றுள்ள பணியாளர்களில் அஞ்சல் வாக்குமூலம் வாக்களிக்க விரும்புவோர் அனைவரும் மேற்கண்ட வகையில் 25.03.2024-ற்குள் படிவம் 12D இல் அஞ்சல் வாக்குக்கோரி விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் பாராளுமன்ற தொகுதி, தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News