பெண்ணை தாக்கியவர்கள் கைது

கீழ்வேளூர் அருகே மகனுடன் மது அருந்தியதை தட்டிக் கேட்ட பெண்ணை தாக்கிய அண்ணன் தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.;

Update: 2024-02-15 09:29 GMT

நாகை மாவட்டம், கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பூலாங்குடி மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி மனைவி ரேணுகா ரேணுகாவின் மகன் ரஞ்சித் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிங்காரவேல் மகன் விமல்ராஜ் என்கிற இயேசு ராஜுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

இதனை அறிந்த ரேணுகா இயேசுராஜை அழைத்து கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட முன்னுதகத்தில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு ரேணுகாவிடம் இயேசு ராஜ் அவரது சகோதரர் வினோத் ராஜ் இருவரும் சேர்ந்து தகராறு செய்து அவரை கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர்.

Advertisement

இதில் காயம் அடைந்த ரேணுகா சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ரேணுகா கீழ்வேளூர் காவல் நிலையத்தில் பிப்ரவரி 14 புதன்கிழமை காலை 10 மணிக்கு கொடுத்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் இயேசு ராஜ் மற்றும் விமல்ராஜ் ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து இயேசுராஜை கைது செய்தனர்.

 இந்த நிலையில் இயேசு ராஜ் மனைவி சவுந்தர்யா கீழ்வேளூர் காவல் நிலையத்தில் ரேணுகா தன்னை ஆபாசமாக திட்டி கையை பல்லால் கடித்ததாக புகார் அளித்துள்ளார். இரு வேறு வழக்குகளுக்கு தனித்தனி வழக்காக பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News