கொள்ளையடிக்க திட்டம் தீட்டியவர்கள் கைது
கொள்ளையடிக்க திட்டம் தீட்டியவர்களை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-28 05:43 GMT
குற்றவாளிகள் கைது
சிறையிலிருக்கும் கூட்டாளிகளை வெளியில் கொண்டு வந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்தவர்கள் ஜெய்பால்36, தாமோதரன்22, பாலகிருஷ்ணன்24, பெருமாள்பட்டி லிங்கேஷ்பரத்20,திண்டுக்கல் சுந்தர்20.இவர்கள் நல்லாம்பட்டி ராஜாக்குளம் பகுதியில் கத்தி,அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி கொண்டிருந்தனர். இதையறிந்த தாலுகா எஸ்.ஐ.,பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் ஓடினர். விடாமல் துரத்தி சென்ற போலீசார் ஐவரையும் கைது செய்தனர். விசாரணையில், தங்களது கூட்டாளிகள் பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறையில் இருப்பதால் அவர்களை வெளியில் கொண்டு வர பணம் தேவை என்பதால் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக கூறினர். அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.