சிவகாசியில் ஓடும் பேருந்தில் தங்க நகை திருடியவர்கள் கைது

சிவகாசியில் ஓடும் பேருந்தில் தங்க நகை திருடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2024-06-20 11:43 GMT

காவல் நிலையம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூவநாதபுரம் மேற்கு தெருவை சார்ந்தவர் ராமசாமி இவருடைய மனைவி கோசலை இவர் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மதியம் சிவகாசி அருகே உள்ள சுந்தரராஜபுரத்திலிருந்து,

சிவகாசி வருவதற்காக அரசு பேருந்து வந்த பொழுது கோசலையின் அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அவரின் கவனத்தை திசை திருப்பி கோசலை அணிந்திருந்த நான்கு பவுன் திருடி சென்றுள்ளனர் இது தொடர்பாக கோசலை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement

இந்த வழக்கு சம்பந்தப்பட்ட எதிரியை விரைவில் கண்டுபிடித்து கைது செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அறிவுறுத்தலின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டது.தீவிரப்புலன் விசாரணை செய்ததில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் கோவில்பட்டி மந்திதோப்பை சார்ந்த பொன்னுத்தாயி என்பது தெரிய வந்தது அவர் திருடிய கண்டுபிடிக்கப்பட்டு கடந்த 17ஆம் தேதி திருடு போன நான்கு பவுன் தங்க நகை மீட்கப்பட்டது.

இதை எடுத்து கைது செய்யப்பட்ட 95 நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட இருப்பதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News