தோழி பெண் தொழிலாளர்கள் நல சங்கம் மே தின கருத்தரங்கம்

திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி பகுதியில் தோழி பெண் தொழிலாளர்கள் நல சங்கம் மே தின கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-05-02 12:08 GMT

கருத்தரங்கம்

திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி பிருந்தாவனம் தாஸ் -சிபி ஆர் அலுவலகத்தில் தோழி பெண் தொழிலாளர்கள் நல சங்கம், தோழி தமிழ்நாடு கூட்டமைப்பு , தோழி பெடரேசன் தமிழ்நாடு மற்றும் சேஞ்ச் தொண்டு நிறுவனம் இணைந்து மே தின கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் வரவேற்புரை தோழி தமிழ்நாடு பெடரேசன் தலைவர் சரஸ்வதி கூறினார்.

தோழி தமிழ்நாடு கூட்டமைப்பின் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் மருத்துவர் சந்திரா , சேஞ்ச் நிறுவன இயக்குனர் புவனேஸ்வரி, லயன்ஸ் கிளப் கவர்னர் புவனேஸ்வரி, ராஜா கல்வியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் துரைமணி , வழக்கறிஞர் அமுதானந்தன், சமூக ஆர்வலர் அசோகன் தொழிற்சங்கத்தின் தலைவர் ஜெயலக்ஷ்மி, நிர்வாக குழுவினர் சிவானந்தம் மற்றும் காயத்ரி வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காலனி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளின் பெண் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டடோர் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற தொழிலாளர்கள் தமிழகத்தின் பெண் தொழிலாளர்களின் பணியிடங்களில் கீழ்கண்ட கோரிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கூறினார்கள். அவை பாதுகாப்பான வேலையிடம், 8 மணி நேரம் வேலை, பாலியல் தொந்தரவு இல்லா நிலை, அதிகபட்ச நேரம் வேலை செய்தால் சட்டப்படியான கூலி, பணி நிரந்தரம், தங்குமிடங்களில் பாதுகாப்பு, இவைகளுடன் தமிழ்நாடு அரசு விடுதி பாதுகாப்பு சட்டம் 2014னை அமுல்படுத்த வேண்டும் . மேலும் மருத்துவ வசதி, விடுதிகளில் சத்தான உணவு, சுகாதாரமான விடுதி அறைகள் மற்றும் கழிப்பறைகள் ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை, உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனே வீட்டிற்கு செல்ல அனுமதி, பாதுகாப்பாக்கு ஒருவர் உடன் செல்லவும், வேலை பழகுனர் என்று பல ஆண்டுகளாக வேலையில் வைத்திருப்பது கூடாது, சட்ட சலுகைகளான பணிக்கொடை ,வருங்கால வைப்பு நிதி ,தொழிலாளர் காப்புறுதி, விபத்து காப்பீடு மற்றும் இழப்பீடு ESI மருத்துவ வசதி தொழில் செய்யும் இடத்தில் ESI க்கான பணம் பிடிக்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுமக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டிற்குள் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஈஎஸ்ஐ பிடித்தம் செய்து இஎஸ்ஐ மருத்துவமனையை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பினை ஹாப்ஸ் இயக்குனர் பழனிவேல்சாமி செய்தார். தோழி தொழிற்சங்க பொறுப்பாளர்கள் காயத்ரி மற்றும் உஷா ஆகியோர் கலந்துகொண்டனர் .இறுதியில் ஐயப்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News