நாமக்கல்லில் குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று பேர் கைது - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

Update: 2024-02-21 07:30 GMT
நாமக்கல்லில் வழிப்பறி வழக்கில் கைதான மூன்று போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். நாமக்கல் அருகே கூலிப்பட்டி பகுதியில் கடந்த டிசம்பர். 27-ஆம் தேதி தனியாக சென்றவரை மிரட்டி ரூ. 90 ஆயிரத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். இது தொடா்பாக பாதிக்கப்பட்டவா் அளித்த புகாரின் பேரில், நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸாா் விசாரணையில் 12 போ் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், குற்றச் செயலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான காா்த்திக் (எ) கார்த்திகேயன், தக்குவா(எ) தனீஷ்க் மற்றும் லோகேஷ் ஆகியோா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவா்கள் மூன்று பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டாா். மேலும் இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.
Tags:    

Similar News