காங்கேயத்தில் வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

காங்கேயம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த வெறிநாய்கள் மூன்று ஆடுகளை கடித்துக் குதறியது.;

Update: 2024-06-21 16:17 GMT

ஆடுகள் பலி

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த வீரணம் பாளையம், பச்சாபாளையம், பகவதி பாளையம்‌ ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்குதோட்டங்களில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் வீரணம் பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி வேலுச்சாமி என்பவரது தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த ஆட்டுப் பட்டியில் நல்லிரவு புகுந்த சுமார் 10க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது.

Advertisement

இதில் 3 ஆடுகளை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் இப்பகுதியில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடுகள் இது போல் வெறிநாய்கள் கடித்து இறந்ததாக கூறுகின்றனர்.

மேலும் இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இறந்த ஆடுகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் போவதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அப்பகுதி விவசாயிகள் பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News