நாகை அரசு பள்ளியில் முப்பெரும் விழா !

நாகை நெல்லுக்கடை தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2024-03-14 08:45 GMT

காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ சிங் 

நாகை நெல்லுக்கடை தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பள்ளி விளையாட்டு வீரர்களின் மரியாதை அணிவகுப்பை ஏற்றுக் கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ சிங் வழங்கினார். நாகை நெல்லுக்கடை தெருவில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சுமார் 300 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், மேலும் பள்ளியில் இந்த வருடத்திற்கான முப்பெரும் விழா கொண்டாடப்படும் நிலையில், இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சகாய ஜோசப் ராஜ் அவர்களின் அழைப்பை ஏற்று நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பள்ளியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்கள்,மேலும் விளையாட்டுப் போட்டிகளில் முதலிடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கௌரவித்தார்கள். சிறப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் மற்றும் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News