அரசு பஸ் கண்டெய்னர் லாரி மோதல் மூன்று பேர் படுகாயம்
வேடசந்தூர் அருகேயுள்ள ரெங்கநாதபுரத்தில் பயணிகளை இறக்குவதற்காக நின்ற பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-10 08:50 GMT
அரசு பஸ் கண்டெய்னர் லாரி மோதல்
வேடசந்தூரில் இருந்து பள்ளபட்டி நோக்கி 13 பயணிகளுடன் நேற்று அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. வேடசந்தூர் அருகேயுள்ள ரெங்கநாதபுரத்தில் பயணிகளை இறக்குவதற்காக பஸ் நின்றது. அப்போது பின்னால் பெங்களூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி பஸ்சின் மீது பயங்கரமாக மோதியதில் பஸ் சாலையோரம் உள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.