ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சடலமாக மீட்பு
கீழ்பவானி வாய்க்காலில் துணி துவைக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.;
Update: 2023-12-19 07:17 GMT
கீழ்பவானி வாய்க்காலில் துணி துவைக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கடத்தூர் அடுத்த செண்பகப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் ஞாயிற்றுகிழமை இரவு தனது இரு மகளுடன் வாய்க்காலில் துணி துவைக்க சென்றுள்ளார். கீழ்பவானி வாய்க்காலில் துணி துவைக்கும் பொழுது வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த தனது மூத்த மகள் தர்ஷினி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார் இதை கண்ட தாய் சங்கீதா மற்றும் இளைய மகள் கீர்த்தனா ஆகியோர் தர்ஷினி காப்பாற்ற முயன்ற அவர்களுக்கு நீரில் மூழ்கி அடுத்தடுத்து அடித்து செல்லப்பட்டனர். தற்பொழுது தீயணைப்பு துறையினர் மூன்று பேர் உடலை கைப்பற்றி கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்