வாலிபர் அடித்துக் கொலை : 3 பேர் கைது

திருச்செந்தூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-05-14 15:51 GMT

கைது

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் - தூத்துக்குடி மெயின் ரோட்டில் அடைக்கலாபுரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு எதிர்புறம் உள்ள காட்டுப்பகுதியில் ஆழ்வார்கற்குளம், கீழத்தெருவை சேர்ந்த ராமசாமி மகன் அழகுமுத்து (33) என்பவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

அவரது உடலை கைப்பற்றி திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அழகுமுத்து கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து திருச்செந்தூர் அருகே உள்ள கோயில்விளை பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 11-ந் தேதி வேலை முடிந்து, சம்பளம் வாங்கிக் கொண்டு கூட்டாளிகளான கட்டிட தொழிலாளர்கள் ஆறுமுகநேரி லெட்சுமி மாநகரத்தை சேர்ந்த சாமிகண்ணு மகன் ராஜேஷ் (39), தர்மராஜ் மகன் சின்னதம்பி (44) மற்றும் ராஜமன்னியபுரத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் கருப்பசாமி (49) ஆகியோருடன் சேர்ந்து டாஸ்மாக் கடை எதிரே உள்ள காட்டு பகுதியில் மது அருந்தி உள்ளார்.

Advertisement

அப்போது குடி போதையில் ஏற்பட்ட தகராறில் அழகுமுத்துவை 3 பேரும் சேர்ந்து கல்லாலும், கம்பாலும் அடித்து தாக்கியுள்ளனர். அவரது மர்ம உறுப்பில் காலால் மிதித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து போதையில் இருந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றது, தெரிய வந்தது. இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த அந்த 3 பேரையும் திருச்செந்தூர் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News