மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

விருதுநகரில் வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.;

Update: 2024-04-04 16:53 GMT
மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு, வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில் மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 தமிழகத்தில் ஏப்ரல்-19 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல், இளம் தலைமுறை வாக்காளர்கள், மூத்த வாக்காளர்கள், திருநங்கை, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து 100 சதவீத இலக்கை அடையும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனத்தில் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மூன்று சக்கர மோட்டார் வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வரை சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த மக்களவை பொதுத்தேர்தலில் அனைவரும் தவறாமல் நேர்மையாகவும் நியாயமாகவும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தார்.

Tags:    

Similar News