மூன்று வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து பலி

சேலம் மாவட்டம், தேவூர் அருகே 3வயது குழந்தை கிணற்றில் தவறி விழ்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.;

Update: 2024-05-06 01:22 GMT

குழந்தை பலி

சங்ககிரியை அடுத்துள்ள தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் கார்முகிலன் (மூன்று வயது )என்ற ஆண் குழந்தை அவர் வீட்டிற்கு அருகில் உள்ள அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் அவருடைய பெற்றோர் அடிக்கடி சென்று குளிக்க வைத்துக் கொண்டிருந்ததால் குழந்தையின் பெற்றோர் குழந்தையை அவருடைய தாத்தாவிடம் விட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்ட நிலையில் குழந்தை வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் இறங்கிய பொழுது கிணற்றில் விழுந்து இறந்து விட்டது.

Advertisement

இறந்த குழந்தை தீயணைப்பு துறையின் மூலம் மீட்கப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதில் இறந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையின் இறப்பில் சந்தேகம் எதுவும் இல்லை எனவும் ,எனவே வழக்கு எதுவும் பதிய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டதன் பேரில் இறந்த குழந்த பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது .தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் குழந்தை கிணற்றில் விழ்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News