வாலிபரை தாக்கி பணம் நகை பறிப்பு
வாலிபரை தாக்கி பணம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-14 13:30 GMT
கோப்பு படம்
திண்டுக்கல் அருகே குடிபோதையில் இருந்த வாலிபரை தாக்கி பணம் நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி டாஸ்மாக் கடையின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்த நபரை பத்து பேர் கொண்ட கும்பல் உருட்டு கட்டையாள் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த நகை கைச்செயின் மோதிரம் அகியவற்றை பறித்துச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு தாக்குதலில் பாதிப்படைந்த நபர் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.