கச்சபேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், காஞ்சி நகர செங்குந்த மகாஜன சங்க சமுதாய திருக்கோவில் திருப்பணிக்குழு சார்பில், 3 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.;
Update: 2024-02-04 03:21 GMT
சுந்தராம்பிகை, கச்சபேஸ்வரர்
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், காஞ்சி நகர செங்குந்த மகாஜன சங்க சமுதாயம், திருக்கோவில் திருப்பணிக்குழு சார்பில், 3 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு சுந்தராம்பிகைக்கும், கச்சபேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின், தம்பதி சமேதராய், திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது. இதில், சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.