திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக மூர்த்தி நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

Update: 2024-01-11 09:35 GMT

காவல் ஆணையர் மூர்த்தி 

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட மூர்த்தி நேற்று பொறுப்பேற்று கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் திருநெல்வேலி மாநகர் மக்கள் பெருமழையால் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அந்த பெருந்துயரைத் துடைக்கும் அரசின் பணிக்கு காவல் துறை உற்ற துணையாக திகழும். ஜாதி, சமய பிணக்குகள் ஏற்படுவதைத் தடுப்பதோடு, சட்டம்-ஒழுங்கை பேணிக்காக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரப் பகுதியில் குற்றங்களைத் தடுக்கும் காவல் துறையின் பணிக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கப்படும் என்றார்.
Tags:    

Similar News