தனியார் பேருந்து - லாரி மோதல் : 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திருப்பத்தூர் அருகே தனியார் பேருந்தும் லாரியும் மோதி கொண்ட விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆறுதல் கூறினார்.

Update: 2024-04-30 05:45 GMT

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒகேனக்கல் செல்லும் தனியார் பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் அடுத்த சு. பள்ளிப்பட்டு ரயில்வே மேம்பாலம் அருகில் செல்லும்பொழுது தர்மபுரி பகுதியிலிருந்து லாரி காஞ்சிபுரம் வைக்கோல் ஏற்ற செல்லும் பொழுது நேர் எதிரே பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அப்பகுதியில்உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியும் மருத்துவர்களிடம் தீவிர சிகிச்சை அளிக்கும் படியும் வலியுறுத்தினார் இதில் ஒரு சில பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கும் சென்றனர்,  இந்த விபத்தை குறித்து கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News