கலவை அருகே திருப்பதி மகா கும்பாபிஷேகம்

கலவை அருகே திருப்பதி ஸ்ரீ கங்கை அம்மன் க்கு மகா கும்பாபிஷேகம் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-26 08:55 GMT

கும்பாபிஷேகம்

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள பழையனூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த திருப்பதி ஸ்ரீ கங்கையம்மன் மற்றும் ஸ்ரீ பாப்பாத்தியம்மன் திருகோயிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக சாலையில் முதற்கால யாக சாலையில் பகவத் பிராத்தனை, ஸ்ரீ வரசித்தி கணபதி பூஜை, யஜமான சங்கல்பம், வாஸ்து ஹொமம், அக்னி பிரதிஷ்ட்டை, இரண்டாம் கால யாகத்தில் கோ பூஜை, அக்னி ஆராதனை, கும்ப பூஜை, பிரதான ஹோமம், மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம் மஹா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து வேத பட்டாட்சியர்கள் பூஜை செய்யப்பட்ட கலசத்தை தலையில் சுமந்து மேள தாளம் முழங்க கோவிலில் வலம் வந்து விமான கோபுரம் வந்தடைந்ததும் கலசத்தின் மீது புது நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து புனித நீரை பக்தர்கள் மீது தெளித்தபோது கோவிந்தா.. கோவிந்தா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து கருவறையில் திருப்பதி ஸ்ரீ கங்கையம்மன் மற்றும் ஸ்ரீ பாப்பாத்தியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றதோடு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர தீப ஆராதனை கட்டப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News