காங்., நிர்வாகிகளை சந்தித்த திருப்பூர் தொகுதி வேட்பாளர்
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சுப்பராயன் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
Update: 2024-03-20 12:29 GMT
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சுப்பராயன் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று வேட்பாளர் சுப்பராயன் பின்னி காம்பவுண்ட் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.